முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூபாயை நூறு ரூபாயை நெருங்க இன்னும் 18 காசுகள் மீதமுள்ளது.

மே மாதம் முதல் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.82 காசுகளுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 74 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், அதன் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்…

இன்றைய உலகின் அத்யாவசியப் பொருட்களில் ஒன்றாகிப் போன பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த இரு மாதங்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், அத்யாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 1 லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் கலகத்தில் உள்ளனர்

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது 1 பேரல் கச்சா எண்ணெய் விலை 76 புள்ளி ஒன்று பூஜ்ஜியம் டாலராக உள்ளது. இதில், 159 லிட்டர் கச்சா எண்ணெய் இருக்கும். அதன்படி, இந்திய ரூபாய் மதிப்பில் 1 லிட்டர் கச்சா எண்ணெய் விலை 35 ரூபாய் 50 காசுகளாகும்.

1 லிட்டர் கச்சா எண்ணெய்யிலிருந்து, சுத்திகரிப்புப் பணிக்காக பெட்ரோலுக்கு 3 ரூபாய் 60 காசுகளும், டீசலுக்கு 6 ரூபாய் 10 காசுகளும் செலவாகின்றன. இதன் பின்னர், மத்திய அரசால் கலால் வரி விதிக்கப்படுகிறது. 1 லிட்டர் பெட்ரோலுக்கு 32 ரூபாய் 90 காசுகளும், டீசலுக்கு 31 ரூபாய் 80 காசுகளும் கலால் வரியாக விதிக்கப்படுகிறது. மேலும், விற்பனையாளர்களுக்கு கமிஷனாக 1 லிட்டர் பெட்ரோலுக்கு 3 ரூபாய் 79 காசுகளும், டீசலுக்கு 2 ரூபாய் 59 காசுகளும் வழங்கப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் மீது வாட் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோலுக்கு வாட் வரியாக 30 சதவீதமும், டீசலுக்கு 16 புள்ளி ஏழு ஐந்து சதவீதமும் விதிக்கப்படுகின்றன. மேலும், டீசல் மீது கூடுதல் வரியாக லிட்டருக்கு 25 காசுகளும் விதிக்கப்படுகின்றன.

பெட்ரோல் விலையில் மொத்த வரியின் மதிப்பு தற்போதைய நிலையில், 56 புள்ளி 5 சதவீதமாகவும், டீசலில் இது 50 புள்ளி 31 சதவீதமாகவும் உள்ளது.

 

Advertisement:

Related posts

டெல்லியில் விவசாயிகளுடன் நாளை 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை; மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்!

Saravana

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பரமக்குடி ஆட்டுச்சந்தை

Gayathri Venkatesan

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

Halley karthi