முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை

கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

பெட்ரோல் மட்டும் டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் மதிப்பு கூட்டு வரி (VAT) வரிக்கு ஏற்ப விலை மாறுபடும். இதன்காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.19 காசுகளுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ. 93.23-க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் தற்போது பெட்ரோல் விலைக்கு இணையாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டுஅனுமதி அளித்தது.
இதனையடுத்து தற்போதுவரை நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல விலை 10 காசுகள், 20 காசுகள் என எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்ததன் விளைவாக, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய். 100-ஐ தொட்டுள்ளது.

வடமாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை இந்த மாத தொடக்கத்திலேயே ரூ .100 ஐ தாண்டிய நிலையில், தற்போது தமிழகத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் இவ்வாறான விலை உயர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து இனிவரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேசிய தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பி. முரளி நியூஸ் 7 தமிழ் இணைய பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,”கொரோனா ஊரடங்கு மற்றும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தற்போதைக்கு இந்த விலை உயர்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வில் பொதுமக்கள் எந்தளவுக்கு நஷ்டமடைகிறார்களோ அதே அளவு பெட்ரோல் விநியோகிஸ்தர்களும் சமமாக பாதிப்படைந்து உள்ளோம். முதலீடு செய்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற இன்றைய நிலையில் பெட்ரோல் வங்கிகளை நிர்வகிக்க கூடிய வருமானம் இந்த கொரோனா ஊரடங்கு சூழலில் இல்லை. இந்த நிலை நீடித்தால் பெட்ரோல் வங்கிகளை தொடர்ந்து நடத்துவது கேள்விக்குரியான நிலையாக மாறக்கூடும்” என்கிறார் அவர்.

Advertisement:

Related posts

மீண்டும் முதல்வரானார் பினராயி விஜயன்!

முதல்வராக நாளை பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

ஷங்கருடன் 3 படங்களுக்கு ஒப்பந்தமான பிரபல ஹீரோயின்!

Gayathri Venkatesan