காஷ்மீர், லடாக் இடம்பெறாத இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டதற்கு, ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் இணையதளத்தின் கேரியர் என்ற பிரிவில் இந்தியாவின் தவறான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதுபோல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை இரண்டும் தனி நாடுகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ட்விட்டர் பேன் என்ற ஹேஷ்டாக் ட்ரண்டாகி வருகிறது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரி மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லே பகுதியை சீனாவிற்கு சொந்தமானதுபோல், ட்விட்டர் வெளியிட்டிருந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.







