மேற்கு ஆசியாவில் போர் சூழல் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்து. இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு ஆசிய நெருக்கடியால் உலகம் முழுதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
பல நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வரும் நிலையில், இந்திய அரசு கலால் வரியைக் குறைத்து மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடியின் “மக்களுக்கான ஆட்சி” (மற்றும் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் திறனை வெளிப்படுத்துகிறது. “மக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இந்த உணர்திறன் மிக்க முடிவிற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குப் பாராட்டுகள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




