தங்கம் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக சரிந்து வருகிறது அந்த வகையில் நேற்று
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,560-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,000 குறைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,350-க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.