பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளதால் பல நாடுகளிலும் எரிபொருள் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. ஆனால் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கிடையே நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பும், 74 நாட்களுக்கான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.க்கு எங்கும், எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்று தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு தலா 10 ரூபாய் குறைத்துள்ளது. பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.13-ல் இருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் டீசலுக்கான கலால் வரி ரூ.10-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.