5 தொகுதிகளில் போட்டியிடும் தமாகா வேட்பாளர்கள் – ஜி.கே.வாசன் அறிவிப்பு!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

அதிமுகவில் கூட்டணி வைத்திருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, சைக்கிள் சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நான் பாரதிய ஜனநாயக கட்சியின் சின்னமாக உள்ள தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். அதிமுக தமிழகத்தில் முதல் கட்சி, பாஜக இந்தியாவில் முதல் கட்சி, டபுள் இன்ஜின் சர்க்கார் ஆட்சி நடைபெறும். காமராஜரின் ஆன்மா இனி காங்கிரஸ் கட்சியை மன்னிக்காது என்றார். இதனை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஐந்து வேட்பாளர்களை அறிவித்தார்.

ராணிப்பேட்டை – pvm கார்த்திகேயன்

ஈரோடு மேற்கு – எம்.யூ யுவராஜ்

ஒட்டன்சத்திரம் – விடியல் எஸ்.சேகர்

கும்பகோணம் – எம்.கே.ஆர் அசோக்குமார்

கிளியூர் – நிவின் சைமன்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.