மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதால், இ-சேவை மையங்களில் பெண்கள் சென்று உதவித்தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் பெரும்பான்மையானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “எங்களுக்கே தண்ணீர் இல்லை..!” – உத்தரவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா கோரிக்கை

இந்நிலையில் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் அளித்துள்ள இந்த மனுவில்,  “தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் உள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்க வழிவகுக்கும். அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.