சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோரை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருந்த என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகிய இருவரையும் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
அதனை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இருவரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார், கங்கபுர்வாலா ஆகிய இருவரும் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகிய இருவருக்கும் பதவி பிரமானம் செய்துவைக்க உள்ளனர்.
இவர்களது நியமனம் மூலம், நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து காலியிடங்கள் 10ஆக குறைய உள்ளது குறிப்பிடத்தக்கது.







