முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

இ-பதிவு தளத்தில் திருமணத்திற்கான அனுமதி திடீர் நீக்கம்!

தமிழகத்தில் இ-பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், இ-பதிவு இணையதளப் பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து வரும் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப் பட்டுள்ளது. தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய, இ-பதிவு கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இறப்பு, திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால், திருமணத்திற்காக இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

G SaravanaKumar

’முதலீட்டை 3 மடங்கு அதிகரிக்க திட்டம்’ – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

EZHILARASAN D

இயக்குநர் கெளதம் மேனனின் புதிய படத்திற்கான அப்டேட்!

G SaravanaKumar