புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் விளக்கம்!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் தேவை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் தேவை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டம் தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மத்தியக் கல்வி அமைச் சருக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தக் கூட்டத்தை அமைச்சர்கள் மட்டத்தில் நடத்த கோரியிருந்தார். அப்படி நடத்தும்போது புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துகளை தெரிவிக்க இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதற்கு பதில் வராததால், அதில் தமிழக அரசு பங்கேற்கவில்லை.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய கல்வி அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், கல்வி அமைச்சரை இணைக்க வேண்டி அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வராததால், தமிழக அரசு பங்கேற்கவில்லை என்றார்.

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் திருத்தம் தேவை என்றும் குறிப்பிட்டார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.