முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பிற்பகல் நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் கொரோனா நிதியுதவியை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.







