இரண்டு முறை தபால் வாக்களிக்க தவறியவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது என மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில், 80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பது தொடர்பாக, அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், சென்னையில் 16 தொகுதிகளுக்கு 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு நாளைக்கு ஒரு குழு 15 நபர்களிடம் தபால் வாக்குகளை பெறும் எனவும் கூறினார். இரண்டு முறை தபால் வாக்களிக்க தவறியவர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.







