சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பராசக்தி’. இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து வெளியான அடி அலையே, ரத்னமாலா, நமக்கான காலம் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது. இதையடுத்து பராசக்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.







