பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் வார இறுதிநாள் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும், என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கோரிமேடு காவல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தனிமைப்படுத்துதல் சிறப்பு மையத்தில் துணைநிலை…

புதுச்சேரியில் வார இறுதிநாள் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும், என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி கோரிமேடு காவல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தனிமைப்படுத்துதல் சிறப்பு மையத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காகவே வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கூறினார். மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் என்றாலும் கூட, அதை விட உயிரோடு இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
எனவே அனைவரும் ஊரடங்கை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்பட உள்ளனர் என்றும், அதிகப்படியான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதவும் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.