பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து தங்கள்…

பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு தங்கள் குடும்பங்களுடன் சென்றனர்.  இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  அதோடு தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இதில் பயணித்தவர்களுக்கு நிகராக சொந்த வாகனங்களில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றவர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் இருந்தது.  இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்பினர்.  இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:  ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – கோயில் கருவறைக்குள் நிறுவப்பட்ட ராமர் சிலை.!

குறிப்பாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலைக்கு மக்கள் ஆளாகினர்.  இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.