முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

பீல்டிங்கின் போது மோதல்: பிரபல கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி!

கிரிக்கெட் போட்டியின் போது, சக வீரர் மீது மோதியதில் காயமடைந்த தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளஸ்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாஃப் டுபிளஸ்சிஸ். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் எனப்படும் பி.எஸ்.எல். தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தப் போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகின்றன. இதில் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஜால்மி அணிகள் மோதின. இந்த போட்டியின் 7வது ஓவரில் டேவிட் மில்லர் அடித்து ஆடினார். பவுண்டரியை நோக்கி சென்ற பந்தை தடுப்பதற்காக, குவெட்டா அணியில் இடம் பெற்ற தென்னாப்பிரிக்க வீரர் டுபிளஸ்சிஸ் வேகமாக சென்றார்.

அப்போது சக வீரரான, முகமது ஹஸ்னைன் காலில் அவர் தலை மோதிது. இதில் பலத்த காயமடைந்த டுபிளஸ்சிஸ் சுருண்டு விழுந்தார். அவருக்கு அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

Advertisement:

Related posts

புயல் நிவாரணம் வழங்ககோரி போராடியவர்கள் மீதுள்ள வழக்குகள் தளுப்படிசெய்யப்படும் – ஸ்டாலின் உறுதி

Gayathri Venkatesan

கேரள உள்ளாட்சித் தேர்தல்: ஒரு ஓட்டில் பாஜகவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்!

Arun

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு: உச்ச நீதிமன்றம் விதித்த கெடு

Ezhilarasan