மக்களே உஷார்! குடைய மறந்துராதீங்க.. காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் – #IMD அறிவிப்பு!

இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு…

People beware! Don't forget the umbrella.. Districts likely to receive rain till 10 am - #IMD Alert!

இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (அக். 15) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று (அக். 16) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (அக். 16) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசானது முதல் மிதமான மழை திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தேனி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.