முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த
2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீனாவில் வூகான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சீனாவில் இருந்து வந்த அவருக்குத்தான் முதன் முதலாக நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. படிப்படியாக தொற்று வேகம் அதிகரித்தது. இதனை தடுக்கும் நோக்கில், ஊரடங்குகள் போடப்பட்டன.

பின் ஊரடங்குகள் நீக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் முறை கல்வி, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் கடைகள் செயல்பட அனுமதி உள்ளிட்ட பல தடைகள் செயல்படுத்தப்பட்டிருந்தன. அவ்வகையில் கடற்கரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு, கடந்த 1 மாத காலமாக கடற்கரைகள் மக்கள் கூட்டமின்றி கலையிழந்து காணப்பட்டது.

சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் செல்ல அனுமதி - சென்னை மாநகராட்சி | Chennai | Beach | Marina

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இரவு நேர ஊடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் சமீபத்தில் தளர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையையும் தமிழ்நாடு அரசு நீக்கியது. அதன்படி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மக்கள் அனைவரும் தடையின்றி சென்னையில் உள்ள கடற்கரைக்கு சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

Halley Karthik

‘மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் அம்சம் பட்ஜெட்டில் இல்லை’ – மம்தா பானர்ஜி

Web Editor

சொந்த இடத்தில் வீடு கட்டியவரை அடித்துக்கொன்ற நபர்கள்!

Jeba Arul Robinson