தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 24,418 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,885 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 33,03,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 4,508 ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 3,309 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,198 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 1,649 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 1,264 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அண்மைச் செய்தி: சிக்கலை தந்த புதிய அப்டேட்: அப்டேட்டுக்கு அப்டேட் கொடுத்து தீர்த்து வைத்த வாட்ஸ்அப்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,614 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 640 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 625 பேருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 665 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 866 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 46 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








