சென்னை, கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரை உட்பட கடற்கரையில், நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக பாதையில் அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/news7tamil/status/1477302306781630464
ஒமிக்ரான் பரவல் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை, பொதுமக்களுக்கு மணல்பரப்பில் அனுமதியில்லை எனவும், சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரையில் கடை வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.







