இலவசங்கள் ஏழ்மையை போக்காது என்றும், தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அளிக்கப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும் வேட்பாளருமான டாக்டர் மகேந்திரனை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமது கட்சி வேட்பாளர்கள் யாரும் ஜெயிலுக்கு போனதில்லை என்றும், எந்தவிதத்திலாவது அவர்கள் மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் கூறினார்.
விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது முதலே மக்களிடம் மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், இது ஒரு நோய் என்றும் குறிப்பிட்டார். மது அருந்தும் நோயை குணப்படுத்த, பாதி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, அந்த இடங்களில் மனநல மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும், இலவசம் ஏழ்மையை போக்கவே போக்காது எனக் கூறிய அவர்,
தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அளிக்கப்படுவதாகவும் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினார்.







