பட்ஜெட் கூட்டத்தொடர் – மக்களவையில் இருந்து I.N.D.I.A. கூட்டணி வெளிநடப்பு!

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,  ஜார்கண்ட் மாநில அரசியல் விவகாரத்தை முன்வைத்து I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச்…

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,  ஜார்கண்ட் மாநில அரசியல் விவகாரத்தை முன்வைத்து I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

இதையும் படியுங்கள் ;  விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி!

இந்நிலையில்,  நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் ஆண்டு தொடங்கியது.  நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.  இதில் கல்வி, தொழில்நுட்பம், மகளிர் மேம்பாடுத்திட்டங்கள், வீடு மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதையடுத்து,  இன்று மக்களவையில்,  இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதையடுத்து, சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள்  கைது செய்த விவகாரத்தை பற்றி விவாதிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில அரசியல் விவகாரத்தை எழுப்ப முயன்ற நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் I.N.D.I.A. கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.