சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…..!

2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற புத்தகத்துக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில்

“தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் ‘தோழர்’ ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!

தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாடமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.