சிபிஐ விசாரணையால் செந்தில் பாலாஜி பதட்டம் – அண்ணாமலை பேட்டி….!

சிபிஐ விசாரணை காரணமாக கடந்த ஒரு வாரமாக செந்தில் பாலாஜி பதட்டத்தில் இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் அதிமுக அலுவலகத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”கரூரில் 10 ரூபாய் பாலாஜி என்று சொன்னவுடன் செருப்பு வீசப்பட்டது. செந்தில் பாலாஜி நாளை சிபிஐ விசாரணைக்கு செல்கிறார். இதனால் அவர் கடந்த ஒரு வாரமாக பதட்டத்தில் இருக்கிறார். சிபிஐ விசாரணை முடிந்து வரட்டும்.

விஜய்யுடன் கூட்டணி பேச்சு வார்த்தை இதுவரை இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக சொல்லி இருக்கிறார்.

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் பிரச்சனை இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி பேசாமல் 24 மணி நேரமும் விஜய் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என தொடர்ந்து திமுக தலைவர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

கரூர் சம்பவத்தின் போது அரசு மருத்துவமனைக்கு உதவி செய்வதற்காக முதலில் சென்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஆனால், செந்தில் பாலாஜி திமுக மருத்துவர் அணி என்று ஆம்புலன்ஸ்களை கூட்டிக்கொண்டு, நேரலையில் தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டிருந்தார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.