தலிபான்களிடம் கடந்த 2 வாரங்களாக கடுமையான போரில் ஈடுபட்டு வந்த பஞ்ச்ஷிர் போராளிகள் குழு தற்போது சரணடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் இருந்து வந்தன. அமெரிக்க படைகள், ஆப்கனில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, ஆப்கானை தலிபான்கள் எளிதாக கைப்பற்றினர். மேலும், அவர்கள் விரைவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை இருந்து வந்தது. தலிபான்களுடன் பஞ்ச்ஷிர் போராளிகள் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தலிபான்களுடனான போரில் போராளி குழுக்களின் செய்தி தொடர்பாளர் பாகீம்தாஸ்தி, முக்கிய தளபதிகள் கைதர்கான், முனீப் அமிலி, வாதூர் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், இந்த படையின் தலைவர் அகமதுமசூத், முன்னாள் துணை அதிபர் அமர்துல்லா சலே ஆகியோர் தப்பி ஓடி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் பஞ்ச்ஷிர் மாகாணத்தை முழுமையாக கைப்பற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.