முக்கியச் செய்திகள் இந்தியா

தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்கவில்லை; உச்சநீதிமன்றம் அதிருப்தி

உச்சநீதிமன்ற தீர்ப்பு, உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் இன்று விசாரணை நடைபெற்றது. தீர்ப்பாயங்களில் உள்ள பணியிடம் நிரப்புதல் குறித்த பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மத்திய அரசு ஏன் நிரப்பவில்லை என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி,உச்சநீதிமன்றத்தின் பொறுமையை மத்திய அரசு சோதிப்பதாக குறிப்பிட்டார்.

தீர்ப்பாயங்களை நடத்த விருப்பமில்லை என்றால் அவற்றை மூடி விடலாமா எனவும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வினவினார். இந்த விவகாரத்தில், நியமனங்களை நிரப்ப உத்தரவிடுவது, தீர்ப்பாயங்களை மூடிவிட்டு வழக்குகளை உயர்நீதிமன்றங்களை விசாரிக்க சொல்வது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது ஆகிய மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக கூறிய தலைமை நீதிபதி, தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு, உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதில்லை என அவர் அதிருப்தி தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

Vandhana

மேகதாது விவகாரத்தில், முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்: அமைச்சர் ரகுபதி

Gayathri Venkatesan