பாலமேடு ஜல்லிக்கட்டு: இதுவரை 31 பேர் காயம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 31 பேர் காயமடைந்துள்ளனர்.  உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.  மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி…

பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 31 பேர் காயமடைந்துள்ளனர். 

உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.  மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.  மாவட்ட  ஆட்சியர் சங்கீதா,  எம்.பி. வெங்கடேசன்,  எம்எல்ஏ பூமிநாதன் கலந்து கொண்டனர்.  போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.  பரிசோதனைக்கு பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கும்,  700 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.  மாடுபிடி வீரர்களின் உறுதி மொழி ஏற்புக்கு பிறகு ஜல்லிக்கட்டு துவங்கியது.  முதலில் 6 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதையும் படியுங்கள்:  அமெரிக்க அதிபர் தேர்தல் – விவேக் ராமசாமி விலகுவதாக அறிவிப்பு!

இந்த போட்டியில் காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மேலும் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில் இந்த போட்டியில் இதுவரை 31 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  காயமடைந்தவர்களில் 11 பேர் மாடுபிடி வீரர்கள்,  9 பேர் மாட்டின் உரிமையாளர்கள்,  9 பேர் பார்வையாளர்கள்,  காவலர் இருவர் என்பதும்,  இருவர் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.