தங்கம் விலை சரிவு… இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.  தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

இதையும் படியுங்கள்: வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அந்த வகையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.  அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.5,850-க்கும்,  பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து கிராம் ரூ.78.00-க்கும்,  ஒரு கிலோ (கட்டி வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.