புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் 9ம் தேதி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் துவங்குகின்றது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9ம் தேதி காலை
9.45 மணிக்கு கூட உள்ளதாகவும், இதற்கான கோப்பிற்கு புதுச்சேரி துணைநிலை
ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் புதுச்சேரி சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மார்ச் 9ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை
செளந்தரராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதன் பின்பு அலுவல் ஆய்வுக்குழு கூடி, 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் மற்றும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இறுதி செய்யும்.
இதையும் படியுங்கள் : தமிழக தலைமை தகவல் ஆணையர் யார்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலில்படி, இந்த நடைமுறையை மாற்றி, இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு திட்டமிட்டது.
இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் அண்மையில் கூடியது. இக்கூட்டத்தில், பட்ஜெட் தொகையாக ரூ.11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு திட்டக்குழு அனுப்பியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும், நிதியை உறுதி செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியமாகின்றது. ஒப்புதல் கிடைத்தவுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் இறுதி செய்யப்பட உள்ளது.