திமுக வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மிகுந்த கோபமடைந்திருந்த மக்கள் திமுக திருந்திவிட்டது என்று கருதி ஆட்சிப் பொறுப்பை கொடுத்துவிட்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளில் திமுக என்ன சொன்னார்களோ அதில் ஒன்று கூட திமுக நிறைவேற்றவில்லை. 5 ஆண்டுகளிலே வர வேண்டிய அதிருப்தி 20 மாதங்களிலேயே திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி வந்துவிட்டது என்பதுதான் உண்மை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஈரோட்டில் மின் கட்டண உயர்வு மக்களை வெகுவாக பாதித்து இருக்கிறது.
அம்மாவுடைய உண்மையான தொண்டர்களாக தங்களை நினைப்பவர்கள் போன முறை செய்த தவறை மீண்டும் செய்யாமல் எல்லோரும் ஓரணியில் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால்தான் அவர்களை வீழ்த்தமுடியும். திமுகவின் பணபலம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை எதிர்க்க அக்கட்சியை எதிர்க்ககூடியவர்கள் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும்.
திமுகவை வீழ்த்தனும் என்ற முயற்சியில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஓ.பன்னீர்செல்வம் தன் தவறை உணர்ந்துவிட்டார். எட்பாடி பழனிசாமிதான் அதிமுக பிரிந்து கிடப்பதற்கு காரணம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.