சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது திமுக மட்டுமே – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தது திமுக அரசு எனவும், அவர்களுக்கு அரணாக இருப்பது திமுக எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும்,…

சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தது திமுக அரசு எனவும், அவர்களுக்கு அரணாக இருப்பது திமுக எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான அப்துல் வஹாப் இல்ல திருமண விழா இன்று (பிப். 18) நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் அவர் பேசியதாவது,

“2014-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விமர்சித்து வைக்கப்பட்ட விளம்பரத்தை அகற்றி கைது செய்யப்பட்டவர் அப்துல் வஹாப். இந்த விழாவிற்கு சிறுபான்மையினர் அதிக பேர் வந்திருக்கின்றீர்கள். சிறுபான்மையினர் மக்களுக்கு அரணாக துணையாக இருப்பது யார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். 

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான சட்ட திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தது திமுக அரசு. ஆனால் அன்றைய தினம் இந்த சட்ட திருத்தத்தை ஆதரித்து வாக்களித்து அதிமுக. இன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அப்படியே பல்டி அடித்து பேசிக் கொண்டிருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் அந்த் சட்ட திருத்தங்களை ஆதரித்ததாகவும் பேசிக் கொண்டிருக்கிறார். எப்பொழுதும் சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது திமுக மட்டுமே” இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.