உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு மட்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சி புரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக ஆளுநரை விமர்சித்துள்ளார்.
சென்னையில் 140 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உள்பட 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
அப்போது உரையாற்றிய முதலமைச்சர், சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் போன்றது என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வாய்ப்பை இழக்கும் பாகிஸ்தான்?
மக்களை குழப்பும் வகையில் தினம் தினம் ஏதாவது ஒன்றை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டு இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை என்று விமர்சித்தார்.







