ஆன்லைன் விற்பனை மோசடியால் தரமற்ற பொருளை வழங்கியதாகவும் புகார் அளித்தும் பலனில்லை எனக் கூறி வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஃபிலிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில்
இருந்து போல்ட் என்ற நிறுவன புளுடூத் காலர் மைக் ஹெட்போன் ஒன்றை ரூபாய் 1,350 கேஸ் ஆன் டெலிவரி மூலம் ஒரு இளைஞர் வாங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் புளுடூத் ஹெட்போன் மோசமான சவுண்ட் குவாலிட்டி இருந்துள்ளது. மலிவான விலையில் தெருவோரக் கடைகளில் 100 ரூபாய் மதிப்புள்ள ஹெட்போனை விட மோசமான சவுண்ட் குவாலிட்டியுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த ஹெட்போனை கடந்த மார்ச் 15 ஆம் தேதி ரீபிளேஸ்மண்ட் செய்து தர கோரி ஃபிலிப்கார்ட் நிறுவனத்திற்கு புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து முறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல முறை நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு மாற்றி கொடுக்க கேட்டுள்ளார். ஆனாலும் ஃபிலிப்கார்ட் கஸ்டமர் சேவை மையத்தில் இருப்பவர்கள் சரியான பதில் அளிக்காமல் அலைகழித்துள்ளனர்.
பின்னர் ரிட்டர்ன் அனுப்பிய பொருளுக்கு கேன்சல் என பதில் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கஸ்டமர் சேவை மையத்தினை மீண்டும் தொடர்ப்பு
கொண்டு நான் உங்கள் நிறுவனத்தில் பல்வேறு பொருட்களை பல வருடங்களாக வாங்கி வந்துள்ளேன் ஆனால் இப்பொழுது 1350 ரூபாய் மதிப்புள்ள ஒரு போல்ட் ஹெட்செட்டை வாங்கினேன் அது சவுண்ட் குவாலிட்டி குறைவாக உள்ளது என பலமுறை புகார்
அளித்தேன்.
இந்த புகாருக்கு அதனை மாற்றித் தர முடியாது என தெரிவித்துள்ளீர்கள். சவுண்ட் குவாலிட்டிக்காக தான் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து ஹெட்செட் வாங்கினேன். ஆனால் அதில் கூட சவுண்ட் குவாலிட்டி இல்லை. போல்ட் கம்பெனிக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பதாக சந்தேகம் எழுகிறது.
இது போல என் நண்பர்களுக்கும் நடந்துள்ளது ஆகவே இதற்கு தீர்வு காணாமல் நான் விட போவதில்லை . தற்போது நீங்கள் பல நிறுவனங்களின் பெயரில் போலி பொருட்களை விற்பனை செய்வதாக சந்தேகம் எழுகிறது எனவும் உடனடியாக ஃப்லிப்கார்ட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதையடுத்து ஃப்லிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட ஹெட் போனை தீயிட்டு கொளுத்திய வீடியோ காட்சிகள் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளதால் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது







