முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் ரூ.92000 மோசடி செய்த கும்பல் – போலீஸ் வலைவீச்சு

ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறிய நபரிடம் ரூ.92 ஆயிரம் இழந்த
என்ஜினீயர் பெண் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

போரூர் அடுத்த காரம்பாக்கம், சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி(30). பொறியியல் பட்டதாரியான இவர்  ஆன்லைனில் பதிவு செய்து வேலை தேடி வந்தார். இந்த
நிலையில் அவர்  பதிவு செய்து வைத்திருந்த ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து நபர்
ஒருவர் தொலைபேசியில் பேசி  உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த நபர் பிரியதர்சினியை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யும் பகுதி நேர வேலை என்றும் தான் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதாகவும் பிரியதர்சினிக்கு ரூ.1.50 லட்சம் சம்பளம் என கூறியதையடுத்து பிரியதர்ஷினியிடம் பெண் ஒருவர் பேச தொடங்கியுள்ளார்.

இதனையும் படியுங்கள்: ஏடிஎம் எந்திரத்தை கல்லைப் போட்டு உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பிரியதர்சினி செல்போனுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி அதில் தன்னை முதலில் ஆயிரம் செலுத்தினால் 1300 ஆக பெற்று கொள்ளலாம் என்று கூறிய நிலையில் அதன் நம்பி ஆயிரம் செலுத்திய பின் மீண்டும் 1300 வந்ததாகவும், பின்னர் ஐந்தாயிரம் செலுத்தினால் 6000 பெற்று கொள்ளலாம் என்று கூறிய நிலையில் 5 ஆயிரம் செலுத்தியதாகவும் மீண்டும் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் அப்போதுதான் மொத்த பணமும் திரும்ப பெற முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனது பணம் பறிபோய் விடுமோ என பயந்து போய் அனுப்பிய பணத்தை திரும்ப பெற வேண்டும் என ரூ.25 ஆயிரம் செலுத்தியதாகவும் அதற்குள் மர்ம நபர்கள் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.62,000 எடுத்து கொண்டதும் இதையடுத்து வங்கி கணக்கை பரிசோதனை செய்து பார்த்தபோது தனது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.92 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தனக்கு ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி பேசிய நபரின் பேச்சை நம்பி என்ஜினீயர் பெண் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.92,000 இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயில் – இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை

Halley Karthik

முதலமைச்சரின் சைக்கிள் பயணம்

Gayathri Venkatesan

டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்து: இருவர் உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy