முக்கியச் செய்திகள் இந்தியா

ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்

ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என  மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அவ்விளையாட்டுகளை வடிவமைக்கும் இணையதளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா? என நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், திறமையின் அடிப்படையிலான விளையாட்டு மற்றும் வாய்ப்பை அடிப்படையாக கொண்ட விளையாட்டு இடையேயான வேறுபாடு குறித்து நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகள் இந்திய சட்டங்களின் கீழ் ‘சூதாட்டம்’ என்று கருதப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : தனுஷ் பகிர்ந்த ’கேப்டன் மில்லர்’ பட போஸ்டர் – இணையத்தில் வைரல்!

மேலும் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவை மாநில அதிகாரத்தின் கீழ் வருபவை, எனவே இதை தடுப்பது மாநில அதிகார வரம்பின் கீழ் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி, எஸ்.ஆர்.பார்த்திபன், மத்திய அமைச்சரின் பதில் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் இயற்ற மத்திய அரசுக்கே அதிகாரம் என்ற தமிழ்நாடு ஆளுநரின் கருத்து இனி எடுபடாது என்றார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் விரும்புவதாக அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக ஆட்சியில்தான் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Web Editor

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

Dinesh A

ரஷ்யாவிற்கு உதவும் எண்ணத்தை கைவிடுக – ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்

EZHILARASAN D