நடிகர் தனுஷ் தனது ரசிகரால் வடிவமைக்கப்பட்ட ’கேப்டன் மில்லர்’ பட போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து, சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரண் இயக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்கள் : 10,000 ஆக உயர்ந்து காலிப்பணியிடங்கள் – குஷியில் குரூப் 4 தேர்வர்கள்!
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ’கேப்டன் மில்லர்’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.
https://twitter.com/dhanushkraja/status/1638218141875736576?t=tV01c45HbQIACkEWW8pQkg&s=08
இந்நிலையில், ரசிகரால் வடிவமைக்கப்பட்ட ’கேப்டன் மில்லர்’ பட போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனுஷ், நீண்ட கூந்தலுடன் அடர்த்தியான தாடியும், மீசையும் வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.








