இனி ஆன்லைன் பணப் பரிமாற்றம் இலவசம் இல்லையா? எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

எஸ்பிஐ வங்கி சார்பில் இன்று முதல் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைகளுக்கு தனிக்கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் IMPS சேவைகளுக்கு சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிப்பதாக அறிவித்தது.

இதன்படி, ரூ.25,000 க்கு மேற்பட்ட தொகையை, செல்போன் செயலி, இண்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் பரிமாற்றம் செய்தால் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முதல் ஒரு லட்சம் வரை ஐஎம்பிஎஸ் முறையில் பணம் அனுப்பினால் 2 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், 6 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சேவை கட்டணம் + ஜிஎஸ்டி என்பது எஸ்பிஐயின் இண்டர்நெட் பேங்கிங், செல்போன் செயலி வழியிலான பணப்பரிமாற்றம் யோனோ செயலி வழியிலான பணப்பரிமாற்றத்துக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ரூ.25 ஆயிரத்துக்குள் பணப்பரிமாற்றம் செய்தால் சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கிடையாது. எஸ்பியின் இந்த புதிய அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்யும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த கட்டண உயர்வு டிஜிட்டல் சேவைகளைப் பராமரிப்பதற்கும், தொடர்ந்து தொய்வின்றி சேவைகளை வழங்கவதற்காகவும் ஏற்படும் செலவுகள சமாளிப்பதற்காகவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எஸ்பிஐ என்று வங்கி விளக்கம் அளித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவைப்பட்டால் NEFT அல்லது RTGS போன்ற மாற்று பணப் பரிமாற்ற வழிகளை பயன்படுத்தலாம் என்றும் எஸ்பிஐ அறிவுரை வழங்கி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.