தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய திமுக ….!

திமுக தனது கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது.

தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ள நிலையில் திருச்சி சிவா, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மாநிலங்களவை தேர்தலில் 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க இயலும். அத்தகைய சூழ்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மார்ச் 5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்கியுள்ளது.

மேலும் ராஜ்யசபா உறுப்பினாராக யார் போட்டியிடுவார் என்பது குறித்து கட்சியினருடன் கலந்து பேசி முடிவெடுக்க படும் என்று தேமுதிக பொருளாலர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.