இரவு 10 மணிவரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இரவு 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைபெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் டி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.