நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என்ற பெயரில் மீண்டும் உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும் போது அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் பரவி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே, கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கும் மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒருவருக்கும் என மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்தவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் உள்ளது தெரியவந்துள்ளது.
இதேபோல், தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு நான்காக அதிகரித்துள்ளது.