முக்கியச் செய்திகள் கொரோனா

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்; மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கவும், மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 8 மற்றும் பிரிவு 54(1)ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் ஆக்கப்படுவதாகவும், தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்படுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது

Vandhana

காங்கிரசை பின்பற்றுகிறதா பாஜக?

Saravana Kumar

உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது; ராகுல் காந்தி

Halley Karthik