முக்கியச் செய்திகள் கொரோனா

மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவரும், குஜராத்தில் ஒருவர் என மூவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கீழ்பெரும்பாக்கம்  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன்,  பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். ஏற்கெனவே இங்கிலாந்து, சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேருக்கு அறிகுறி தென்பட்டதால் அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இன்று இங்கிலாந்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த மேலும் ஒரு பயணிக்கு  அறிகுறி தென்பட்டிருப்பதால் அவரது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; சுவர் விளம்பரம் செய்யத் தடை

Saravana Kumar

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்!

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!

Saravana