முக்கியச் செய்திகள் கொரோனா

கொரோனா உறுதியானாலே அது ஒமிக்ரான் இல்லை: சுகாதாரத் துறை செயலாளர்

தமிழ்நாட்டில் தற்போது வரை ஒமிக்ரான் வைரஸ் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் என 4 பேருக்கு இதுவரை ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒமிக்ரான் உறுதியாகியுள்ளதால், தமிழ்நாட்டின் எல்லைகளில் சோதனை தீவிரமாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் அவசர கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களாக உணர்ந்து உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது வரை ஒமிக்ரான் வைரஸ் இல்லை என்ற ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதியானாலே அது ஒமிக்ரான் இல்லை, மரபியல் ரீதியாக உறுதியானால் மட்டுமே அது ஒமிக்ரான் தொற்று என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசு சார்பில் 3 மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவை மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அடிபணிவது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது”- அமைச்சர் சேகர்பாபு

G SaravanaKumar

3,000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

G SaravanaKumar

’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’

G SaravanaKumar