முக்கியச் செய்திகள் இந்தியா

சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!

சக வீரரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமாரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான சாகர் தான்கருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், டெல்லி சத்திராசல் விளையாட்டு அரங்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன் மோதல் நடந்தது. இந்த மோதலில் சாகர் தன்கட்டை, சுஷில் குமாரும் அவரது நண்பர்களும் கடுமையாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனால், விளையாட்டு அரங்கத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சுஷில் குமாருக்கும் அவரது நண்பர்களுக்கும் லுக் அவுட் நோட்டிஸ் பிறபிக்கப்பட்டது.

இதனால் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து, அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், இன்று டெல்லியில் தனிப்படை போலீசார் சுஷில் குமாரையும் அவரது நண்பர்களையும் கைது செய்தனர். இவர், ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

திமுக- காங்., தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது!

Niruban Chakkaaravarthi

சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசு

எல்.ரேணுகாதேவி

சூரப்பாவிற்கு எதிரான விசாரணை ஆணையம்: நீட்டிப்பு கோர முடிவு!

Saravana