மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக உள்ளவர் பிராவோ. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துவருவது குறித்து கிரிக்கெட் வீரர் பிராவோ கவலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிராவோ, “தமிழக மக்கள் அனைவரும் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேபோல் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை மேற்கோள் காட்டி கிரிக்கெட் வீரர் பிராவோ பதிவு.







