சென்னை, மதுரையில் ஒலிம்பிக் அகாடமிகள் – விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை, மதுரையில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும்…

சென்னை, மதுரையில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 50 லட்ச ரூபாய், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 30 லட்ச ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 20 லட்ச ரூபாய் என மொத்தமாக 9 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதில் உரையாற்றிய முதலமைச்சர், சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்றார். கிராமங்களில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.