ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். புகைப்படங்களை ஒன்றாக அச்சிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், தில்லை நகர் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை ஒன்றாக வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் என இரு அணிகளாக…

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், தில்லை நகர் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை ஒன்றாக வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் என இரு அணிகளாக அதிமுக பிளவு பட்டும் இருக்கும் நிலையில், திருச்சியில் அதிமுகவினர் இதுபோன்று போஸ்டரை ஒட்டியிருக்கின்றனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  இரு தலைவர்களின் புகைப்படத்தையும் ஒன்றுசேர்த்து போஸ்டரில் போட்டு “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்கிற வாசகத்தை போட்டுள்ளனர்.


தமிழகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள்
பெரும்பாலானோர் எடப்பாடி பழனிச்சாமியே ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று
கோரிக்கை வைத்து வரும் நிலையில் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள்
பேசும் பொருளாக மாறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்
என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டுமென பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒற்றைத் தலைமை முடிவுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.