கடலூர் அருகே புது சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணிக்கு வராததால் செல்போன் பயன்படுத்தி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக தாய் காவல் நிலையத்தில் புகார் .
கடலூர் மாவட்டம் தச்சம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெபராஜ் என்பவர் தனது மனைவி ஜெஸ்ஸி ஜெனிபர் பிரசவத்திற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு புது சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார் . காலை 11:15 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. மருத்துவர்கள் இல்லாமல் செல்போன் பயன்படுத்தி செவிலியர்கள் இரண்டு பேர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். பிறகு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் பணிக்கு வராமல் செல்போன் பயன்படுத்தி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக ஆரோக்கிய ஜெபராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குழந்தை இறப்பிற்கு காரணமாக இருந்த இரண்டு செவிலியர்கள் இரண்டு உதவியாளர்கள் மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புதுச்சத்திரம் போலீசார் சந்தேகத்தின் பேரில் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்







