“பிரதமர் மோடி மட்டுமல்ல அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான்” – நியூஸ்7 தமிழுக்கு ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!

பிரதமர் மோடி மட்டுமல்ல,  அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  வயநாடு தொகுதி வேட்பாளருமான ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6ம்…

பிரதமர் மோடி மட்டுமல்ல,  அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  வயநாடு தொகுதி வேட்பாளருமான ஆனி ராஜா தெரிவித்துள்ளார். 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6ம் கட்ட வாக்குப்பதிவிற்கு நடுவே,  டெல்லியில் நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் வசந்தி,  வயநாடு தொகுதி வேட்பாளர் ஆனி ராஜாவிடம் தேர்தல் களம் குறித்து கலந்துரையாடினார். 

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.

6ம் கட்ட வாக்குப்பதிவு இன்றும் (மே 25) நடைபெற்று வருகிறது.  7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதன்படி, 6வத் கட்ட வாக்குப்பதிவு பீகார் (8), ஜார்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை 1 மணி நிலவரப்படி, பீகாரில் 36.48%, ஹரியணாவில் 36.48%, ஜம்மு காஷ்மீரில் 35.22%, ஜார்கண்டில் 42.54%, டெல்லியில் 34.37%, ஒடிசாவில் 35.69%, உத்தரபிரதேசத்தில் 37.23% மற்றும் மேற்கு வங்கத்தில் 54.80% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதியான முனிர்கா பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவுக்கு இடையே,  நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் வசந்தி,  வயநாடு சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜாவை சந்தித்து தேர்தல் குறித்து கலந்துரையாடியுள்ளார்.  அப்போது அவர்,  பிரதமர் மோடி மட்டுமல்ல,  அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான் என தெரிவித்தார்.

இந்த நேர்காணலை முழுமையாக காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.